ETV Bharat / bharat

மும்பை: கடலில் மூழ்கிய 2 சிறுவர்கள் உயிரிழப்பு! - கடலில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு

மும்பை: பதின்பருவத்தைச் சேர்ந்த இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாகத் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Marve beach
Marve beach
author img

By

Published : Jun 22, 2020, 6:32 PM IST

மும்பை மார்வ் கடற்கரைக்கு நேற்று (ஜூன் 21) மாலை 5.30 மணியளவில் ஆறு சிறுவர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. மால்பானி பகுதியிலுள்ள அஸ்மி நகரைச் சேர்ந்த இச்சிறுவர்கள் கடலில் குதூகலமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு சிறுவர்கள் கடலின் ஆழத்தில் சென்று குளிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அலைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அலைகள் அவர்களை மேலும் உள்ளே இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து மற்ற நான்கு சிறுவர்கள் காவல் துறைக்கு தகவல்கொடுத்தனர்.

இதையடுத்து, காவல் துறையுடன், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்தை அடைந்து, இரவு 8 மணியளவில் 13 வயது மதிக்கத்தக்க சிறுவனை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். போதிய வெளிச்சம் இல்லாமையால், 16 வயது மதிக்கத்தக்க மற்றொரு சிறுவனின் உடலை இன்று (ஜூன் 22) காலை மீட்டனர்.

இதையும் படிங்க: குற்றம் - 02: இந்தியாவை அச்சுறுத்தும் பிஷிங் - தப்பிக்க வழிகள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.