சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு (80) திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு வயிற்றுப் பிரச்னை இருந்ததைத்தொடர்ந்து அவரை மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.
அதன்படி முலாயம் சிங், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இதுதொடர்பாக மருத்துவர்கள் எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் அளிக்கவில்லை.