ETV Bharat / bharat

நெருக்கடி நிலையிலும் உலக பில்லியனர்கள் பட்டியலில் டாப்பில் இருக்கும் முகேஷ் அம்பானி! - Forbes world billionaires' list

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இதழ் வெளியிட்ட உலக பில்லியனர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 44.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 17ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

ஃபோர்ப்ஸ்
ஃபோர்ப்ஸ்
author img

By

Published : Apr 10, 2020, 10:03 AM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல், உலக நாடுகள் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றன. இரண்டு மாதங்களாக, அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் அந்தந்த நாட்டு மக்கள் உள்பட அனைத்தும் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் காலத்தில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகும் வாய்ப்புள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் முக்கியமானப் பத்திரிக்கை இதழ் ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் முக்கிய நபரான முகேஷ் அம்பானி 17ஆவது இடத்தில் வகிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு சுமார் 44.3 பில்லியன் டாலர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் அமேசான் நிறுவனரும், தலைமை நிர்வாக அலுவலருமான "ஜெப் பெசோஸ்" 113 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகின் மிகப் பெரியப் பணக்காரராக முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பில்கேட்ஸ் 98 பில்லியன் டாலர் மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அந்தவரிசையில், ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனர் சிவ் நாடார் 12.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 114 ஆவது இடத்திலும், இந்துஜா சகோதரர்களின் சொத்து மதிப்பு 12.2 பில்லியன் டாலர் மதிப்புடன் 116ஆவது இடத்திலும் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, பல்வேறு இந்தியர்கள் பில்லியன் டாலர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் உயிரிழந்த முதல் மருத்துவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.