உலகக்கோப்பைத் தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியது முதல், தோனி ஓய்வு தொடர்பான பேச்சுகள் அதிகளவில் எழத் தொடங்கியுள்ளன.
நீண்ட காலமாகவே தோனி ஓய்வு தொடர்பான கிசுகிசுக்கள் அவ்வப்போது எழுந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வசவாளர்களின் வாயை அடைத்துவருகிறார்.
இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு அவர் பாஜகவில் இணைந்துவிடுவார் என்றும், அதற்கான பேச்சுவார்த்தையில் அவர் நீண்ட காலமாகவே ஈடுபட்டுவருவதாகவும் அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
மேலும், தோனியின் உலக அளவிலான பிரபலம் பாஜகவுக்கு வலு சேர்க்கும் எனவும் அவர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைப் பற்றவைத்துள்ளது.