மத்தியப்பிரதேச அரசு சுகாதார ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய சுகாதார ஆணையத்தின் ஆய்வின்படி, மத்தியப்பிரதேசத்தில் அரை விழுக்காடு ஆண்கள் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு மேற்கொண்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு எனவும் தெரிகிறது.
எனவே, மாநில சுகாதார ஊழியர்கள் ஆண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு மேற்கொள்ளும் வேலையில் தீவிரமாக இறங்கவேண்டும் எனவும், வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் குறைந்தது ஒரு நபரையாவது குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய ஊக்குவிக்க வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தது.
அத்துடன் ஊழியர்கள் இந்த இலக்கை தவறும்பட்சத்தில் ஊதியம் வழங்கப்படமாட்டது என்று, அதிர்ச்சியளிக்கும் வகையில் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து இந்தச் சுற்றறிக்கையை மத்தியப்பிரதேச அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் துளசிதாஸ், தீவிர ஆலோசனைக்குப்பின்னரே இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியிருக்க வேண்டும். முறையாக இல்லாத இந்த அறிக்கையை அரசு திரும்பப்பெறுகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தன்பாலின ஈர்ப்பு பற்றிய பாலிவுட் படம்: ஒற்றை வார்த்தையில் ட்ரம்ப் கருத்து