ஈன்ற பிள்ளைக்காக தாய் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அனைத்தையும் கடந்தது தாய் பாசம் ஆகும். அதனை பறைசாற்றும் விதமாக நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆம், உயிருக்காக போராடிய குட்டி குரங்குக்காக பல மணி நேரம் வீதியில் நின்ற தாய் குரங்கின் பாசம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமா நகரில் குரங்குக் கூட்டம் வீதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது, மின்சாரம் தாக்கி குட்டி குரங்கு ஒன்று பாதிப்புக்குள்ளானது. இதனை பார்த்து பதறிய தாய் குரங்கு, குட்டி குரங்கை காப்பாற்ற அலைந்து திரிந்தது. அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள், மின்சாரத்தை துண்டித்தனர். இதனிடையே, குட்டி குரங்கு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் சுய நினைவடைந்த குரங்கு, மீண்டும் அதன் கூட்டத்துடன் சேர்க்கப்பட்டது. குட்டி குரங்கை பார்த்த தாய் குரங்கு கண்ணீர் விட்டு அழுதது. பாதிக்கப்பட்ட குரங்கு மீட்கப்பட்டு, மீண்டும் கூட்டத்துடன் சேரும் வரை தாய் குரங்கு அந்த வீதியில் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தது.
இதையும் படிங்க: டர்பன்களை வழங்கி இஸ்லாமியர்களைக் காப்பாற்றினோம்