உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் ஒருவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரின் குடும்பதினருக்கு நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு நேற்று (ஏப்ரல் 15) மருத்துவக் குழுவினர் சென்றனர்.
அவரது குடும்பதினரை தனிமைப்படுத்தும் விதமாக ஆம்புலன்ஸ் மூலம் மாற்று இடத்திற்கு கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த குடும்பத்தினரை ஆம்புலன்சில் கொண்டுச் செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், மருத்துவர்களின் வாகனங்களில் கற்களை வீசி தக்குதல் நடத்தினர்.
இதில், அகர்வால் என்ற மருத்துவர் படுகாயமடைந்துள்ளார். அவருடன் இருந்த மருத்துவ அலுவர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள், மருத்துவ பணியார்கள், சுகதாரத் துறையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகல் வேலைபார்க்கும் நிலையில் அவர்கள் மீது இவ்வாறு தாக்குல் நடத்துவது கண்டிக்கத்தக்கது எனவும், குற்றம் புரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சர் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் ஆய்வு