பிப்ரவரி 9
திருவள்ளூர் மாவட்டம்
பராமரிப்பு பணியால் 45 ரயில்கள் ரத்து :
பேசின்பிரிட்ஜ் - வில்லிவாக்கம் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால், சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடி, திருவள்ளூர், திருத்தணி மற்றும் அரக்கோணத்துக்கு இயக்கப்படும், 45 ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடி, திருவள்ளூர், கடம்பத்துார், திருத்தணி, அரக்கோணத்துக்கு, நாளை காலை, 10:05 மணியில் இருந்து, மதியம், 2:00 மணி வரை, 18 புறநகர் மின்சார ரயில்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, இதே ஊர்களுக்கு இயக்கப்படும், ஆறு ரயில்கள் மற்றும் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும், 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன கடற்கரை நிலையத்தில் இருந்து, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூருக்கு, இயக்க வேண்டிய மூன்று ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன சென்ட்ரலில் இருந்து, திருத்தணிக்கு, மதியம், 3:00 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில், நாளை, சென்ட்ரல் - ஆவடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், ஆவடியில் இருந்து திருத்தணிக்கு, மாலை, 3:00 மணிக்கு இயக்கப்படும்அரக்கோணத்தில் இருந்து, காலை, 8:10 மணி, திருவள்ளூரில் இருந்து, காலை, 9:10 மணி, பட்டாபிராமில் இருந்து, காலை, 10:30 மணி, திருத்தணியில் இருந்து, காலை, 9:40 மணிக்கு, சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், நாளை, ஆவடி - சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளன ஆவடியில் இருந்து அரக்கோணத்துக்கு, காலை, 11:10 மணிக்கும், பட்டாபிராமுக்கு மதியம், 1:50 மணிக்கும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணத்துக்கு, காலை, 9:45 மணிக்கும், அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு, காலை, 11:55 மணி, மதியம், 1:50 மணி மற்றும் 2:25 மணிக்கும், நாளை, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு, மதியம், 1:15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.பாதி வழியில் ரத்து சென்னை, கடற்கரை - ராயபுரம் இடையே, ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் ரயில்கள், பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.கும்மிடிப்பூண்டியில் இருந்து, கடற்கரை ரயில் நிலையத்துக்கு, இரவு, 9:40 மணிக்கு இயக்கப்படும் ரயில், இன்று முதல், 16ம் தேதி வரை, வண்ணாரப்பேட்டை - கடற்கரை இடையே, ரத்து செய்யப்பட்டு உள்ளன.இந்த நாட்களில், இந்த ரயில்கள், பாதை மாற்றி, சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும்.கடற்கரை நிலையத்தில் இருந்து, அரக்கோணத்துக்கு, அதிகாலை, 1:20 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில், நிலையம் மாற்றப்பட்டு, நாளை முதல், 17ம் தேதி வரை, சென்ட்ரல்மூர்மார்க்கெட் நிலையத்தில் இருந்து, அதிகாலை, 1:25 மணிக்கு இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.கடற்கரை - வேளச்சேரிரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - வேளச்சேரி ரயில்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, வேளச்சேரிக்கு, காலை, 8:00 மணி முதல், மதியம், 1:40 மணி வரையும்; வேளச்சேரியில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 8:10 மணியில் இருந்து, மதியம், 1:50 மணி வரையும், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, மதியம்,, 2:00 மணியில் இருந்தும், வேளச்சேரி நிலையத்தில் இருந்து, மதியம், 2:10 மணியில் இருந்தும், வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
.visual mojo app