காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இன்று தனது 87ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனையொட்டி மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்த ட்வீட்டில், "பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்குக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியமாகவும் வாழ பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மன்மோகன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : ப. சிதம்பரத்தை சந்திக்க சோனியா, மன்மோகன் திகார் வருகை!