ETV Bharat / bharat

பல்வேறு தளங்களில் நம்மை தோற்கடித்த உலகமயமாக்கல் - ஜி 20 மாநாட்டில் மோடி கவலை

டெல்லி: சூழலியல் சிக்கல், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் உலகமயமாக்கல் நம்மை தோற்கடித்துவிட்டதாக ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

Modi
Modi
author img

By

Published : Mar 27, 2020, 9:23 AM IST

Updated : Mar 27, 2020, 9:31 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பு, அதன் தடுப்பு நடவடிக்கை குறித்து உலகின் 20 முன்னணி பொருளாதார சக்திகளின் கூட்டமைப்பான ஜி-20 நாடுகளின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் காணொலி கட்சி மூலம் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்டு உரையற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மக்களைக் காப்பற்றுவதற்கு ஜி - 20 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவசரத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும், இந்த அசாதாரண சூழலின் காரணமாக சமூகத்தின் அடித்தட்டு மக்கள் பொருளாதார ரீதியாக சந்திக்கும் சிக்கலை களைவதற்கு முக்கிய ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சூழலியல் சிக்கல், பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் உலகமயமகாக்கல் கொள்கை என்பது தோல்வியடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்த மோடி, இந்தச் சூழலில் புதிய கோணத்தில் உலகமயமாக்கல் கொள்கை செயல்படுத்தப்பட்டு மனித குலத்தை காக்க வேண்டியது அவசியம் என்றார். ஜி 20 நாடுகளைச் சேரந்த மக்களே 90 விழுக்காடு கரோனா வைரஸ் பாதிப்பை, 88 விழுக்காடு கரோனா உயிரிழப்பைச் சந்தித்துள்ளனர் என மோடி வருத்தம் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர். கூட்டத்தின் இறுதியில் கரோனா பாதிப்பைச் சமாளிக்க 5 லட்சம் கோடி டாலர் அவசர நிதியாக உலகப் பொருளாதாரத்தில் செலுத்த ஜி - 20 நாடுகள் முடிவெடுத்துள்ளன.

ஜி - 20 அமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனாடா, சீனா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க: பத்தில் ஒரு சுகாதாரப் பணியாளருக்கு கரோனா

Last Updated : Mar 27, 2020, 9:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.