மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதனால் பரப்புரை பொதுக்கூட்டங்கள், வேட்புமனு தாக்கல் என அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் களமிறங்குகிறார். அங்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மேலும், அவரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வாரணாசியில் போட்டியிட இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். முன்னதாக இன்று வாரணாசி செல்லும் அவர் அங்கு சாலையில் பேரணியாக சென்று மக்களை சந்திக்கிறார். இந்த பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது.