முதற்கட்ட தேர்தல் நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை வகித்துவருகிறார். அதேபோன்று, ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.
குஜராத் மாநிலம், காந்திநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா முன்னிலை வகிக்கிறார்.