2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில், ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், இந்திய பொருளாதாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, 40 பொருளாதார நிபுணர்களுடன் டெல்லியில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
'பொருளாதார கொள்கைகள்: தொலைநோக்கு பயணம்' (Economic Policy: The Road Ahead) என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம், நீர் ஆதாரம், ஏற்றுமதி, கல்வி, சுகாதாரம் ஆகிய பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசிக்கும் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் அதிகரிக்க மத்திய அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு இந்தக் கூட்டம் உந்துசக்தியாக அமையும். 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிக்க எண்ணும் மத்திய அரசு, அதற்கு சிறப்பான முறையில் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திவருகிறது. முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை 5 ட்ரிலியன் டாலர்கள் வரை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து அமைச்சர்களின் செயலாளர்களையும் பிரதமர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.