குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அமித் ஷா கூறியுள்ளார். மேலும் இது உறுதியான தீர்மானம் என்றும், இந்தத் தீர்மானத்தை தவறாகப் புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும்
மோடி அரசு ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்த 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ' இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் ஏற்றப்பட்டது என நினைப்பது முற்றிலும் தவறு. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நாட்டில் முற்றிலும் குறையவே இல்லை. ஆனால், இந்துக்களின் தொகை இந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் குறைந்து கொண்டே வருகிறது. இந்துக்கள் அங்கே துன்பப்படுகிறார்கள். ஆனால், இஸ்லாமியர்கள் துன்பப்படவில்லை' எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ' கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்கள் ஆறு லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க: ஆட்சியே கவிழ்ந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் - முதலமைச்சர் நாராயணசாமி