ETV Bharat / bharat

ட்ரம்பின் ஜி-7 அழைப்பை ஏற்ற மோடி!

வாஷிங்டன்: கரோனா பெருந்தொற்றுக்கிடையே வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார்.

trump modi
trump modi
author img

By

Published : Jun 3, 2020, 4:38 PM IST

அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், சீனா ஆகிய வல்லரசு நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 என்று அழைக்கப்படும். இந்நாடுகளில் தலைவர்கள் ஆண்டுதோறும் ஜி-7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு முக்கியப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்துவர்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜி-7 உச்சிமாநாடு, ஜூன் 10ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரை அமெரிக்காவில் நடைபெற இருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேளையில், இந்த மாநாடு செப்டம்பர் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசி மூலம் பிரதமர் மோடியை அழைத்துப் பேசினார். அப்போது, கரோனா, சீனாவுடனான எல்லைப் பிரச்னைகள் குறித்து மோடியிடம் ட்ரம்ப் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஜி-7 கூட்டமைப்பில் இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகளை இணைக்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்திருந்த ட்ரம்ப், அதன்படி செப்டம்பரில் நடக்கவுள்ள ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்புவிடுத்தார்.

இந்த அழைப்பை பிரதமர் மோடி நிகழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதாக வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. ஆனால், ஜி-7 கூட்டமைப்பில் இந்தியா சேர்வது குறித்தும், கூட்டமைப்பில் இந்தியாவுக்கு எம்மாதிரியான பங்கு இருக்கும் என்றும் வெளியுறவுத் துறை விளக்கவில்லை.

ஜி-7 கூட்டமைப்பை விரிவுபடுத்துவது குறித்தான ட்ரம்பின் திட்டம் தொலைநோக்கு சந்தையுடன் எடுக்கப்பட்ட முடிவு என்றும், கரோனா பெருந்தொற்று தொடர்ந்து வரவுள்ள சவால்களை எதிர்கொள்ள இது உதவும் என்றும் மோடி கருத்து தெரிவித்தாக வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் நிறவெறி படுகொலை: ஆஸியிலும் படர்ந்த போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.