டெல்லி: டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.5 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. அடர்த்தியான பனிப்பொழிவால் தேசியத் தலைநகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் பனியால் சூழப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி நிலவரப்படி, சஃப்தர்ஜங் மற்றும் பாலம் வானிலை நிலையங்கள் 300 மீட்டர் தூர அளவிலான பனிமூட்டத்தைப் பதிவு செய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் குளிர் காற்று, பனி நிறைந்த மேற்கு இமயமலையில் இருந்து சமவெளிகளை நோக்கி வீசுகிறது. காற்றின் திசை மேற்கு-வடமேற்கு நோக்கி மாறுவதால் பனி மேலும் குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசமான கட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. டெல்லி நகரின் காற்றின் தரக் குறியீடு காலை 9 மணிக்கு 393ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 400ஆக இருந்தது.
அண்டை நகரங்களான காசியாபாத் (436), கிரேட்டர் நொய்டா (415) மற்றும் நொய்டா (414) ஆகியவற்றில் காற்று மாசு தொடர்ந்து மூன்றாவது நாளாக கடுமையாக இருந்தது.
இன்று(டிச.08) அதிகபட்ச காற்றின் வேகம் 12 கி.மீ வேகத்தில் இருக்கும். அமைதியான காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை காற்று மாசுபாட்டினை குறைக்க வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் அதிகரிக்கும் மூடுபனி - வாகன ஓட்டிகள் அவதி