குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த 9ஆம் தேதி மக்களவையிலும் 11ஆம் தேதி மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
மேகலாயாவில் மக்கள் சாலைக்கு வந்து போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து தவறான அச்சுறுத்தலை தடுக்கவும் பாதுகாப்பை நிலைநாட்டவும் மேகாலாவில் 48 மணி நேரம் மொபைல் சேவைக்கு தடை விதிக்கப்படுவதாக மேகாலயா காவல்துறை கூடுதல் செயலாளர் சி.வி.டி. டயங்டோ தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி மேகலாயாவின் கிழக்கு மலைப்பகுதிகளிலும், சதர், ஜெயாவ், மவ்கர், உம்சோசூன் உள்ளிட்ட பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு உள்ளது. இது போன்று அண்டை மாநிலமான அசாமிலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிப்பு!