ETV Bharat / bharat

மிசோரம் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கோரி அஸ்ஸாம் அரசுக்கு கடிதம்! - இரு மாநில எல்லையோர மாவட்ட மக்களிடையே ஏற்பட்ட மோதல்

ஐஸ்வால்: அஸ்ஸாமில் வசித்துவரும் மிசோரம் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு அம்மாநில அரசுக்கு மிசோரம் உள் துறைச் செயலர் லால்பியாக்சங்கி கடிதம் எழுதியுள்ளார்.

மிசோரம் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கோரி அஸ்ஸாம் உள்துறைக்கு கடிதம்!

author img

By

Published : Nov 3, 2020, 9:55 PM IST

Updated : Nov 3, 2020, 10:07 PM IST

அஸ்ஸாம், மிசோரம் ஆகிய இரண்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையே ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைத் தகராறு நீடித்துவருகிறது.

இதனைச் சுமுகமாக முடிக்கும்பொருட்டு 1995ஆம் ஆண்டு முதல் இது தொடர்பான பேச்சுவார்த்தை இரு மாநில அலுவலர்கள் மட்டத்தில் நடத்தப்பட்டுவருகிறது. இருப்பினும் இந்த எல்லைச் சிக்கல் முடிவுறவில்லை என அறியமுடிகிறது.

மோதல் வெடிக்கும் போதெல்லாம் இருமாநில எல்லைகளான (அஸ்ஸாம்) கொலாசிப்பும், (மிசோரம்) சச்சாரும் வன்முறை காடாக மாறுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நள்ளிரவில் இரு மாநில எல்லையோர மாவட்ட மக்களிடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன, குடிசைகள் கொளுத்தப்பட்டன.

காட்டுமிராண்டித்தனமான இருதரப்பு மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு மாதம் கடந்த நிலையில் இரு மாநில எல்லையில் இன்னும் பதற்றம் நீடித்துவருகிறது.

சட்ட ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர 144 தடை உத்தரவை எல்லையோர மாவட்டங்களில் இரு மாநில நிர்வாகங்களும் அமல்படுத்தியுள்ளன.

இரு மாநிலங்களுக்கு இடையேயான மோதல் காரணமாக அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவரும் மிசோரம் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத்தொடர்ந்து, மிசோரம் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென அஸ்ஸாம் மாநில உள் துறைச் செயலர் ஜி.டி. திரிபாதிக்கு, மிசோரம் மாநில உள் துறைச் செயலர் லால்பியாக்சங்கி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும், அஸ்ஸாமில் வாழ்ந்துவரும் மிசோரம் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

அஸ்ஸாமில் வசிக்கும் மிசோரம் மக்களின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தங்களது சொந்த பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்கள் பதிலடி கொடுக்கும் சூழலை ஏற்படுத்தாமல், பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென மிசோரம் அரசு வலியுறுத்துகிறது.

அத்துடன் மிசோரம் ஹவுஸ், சில்சார், டேங்கர்கள் மற்றும் கச்சார், கரிம்கஞ்ச், ஹைலகண்டி ஆகிய மாவட்டங்களில் சிக்கித் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள், வணிகர்களுக்கும் பாதுகாப்பை வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

மிசோரம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட அஸ்ஸாமைச் சேர்ந்த இன்டாசுல் லாஸ்கர் (45) என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் மோதல் வெடித்ததாக கூறப்படுவது கவனிக்கத்தக்கது.

Last Updated : Nov 3, 2020, 10:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.