நிர்பயா கொலை கைதிகள் சார்பாக வாதாடிய வழக்குறிஞர் ஏ.பி. சிங், “நிர்பயா வழக்கில் கைதிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். இது குறித்து டெல்லியில் அவர் கூறுகையில், “நிர்பயா வழக்கில் குற்றவாளி எனக் கூறி, காலையில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மாலையில் நிராகரிக்கப்படுகிறது.
டெல்லியில் எத்தனையோ வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அதனை தொடர்ச்சியாக கூற முடியும். ஆனால் நிர்பயா வழக்கின் மனுக்கள் மட்டும் தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுகிறது.
இது குற்றவாளிகளுக்கு நீதி மறுக்கப்படுவதை குறிக்கிறது. டெல்லி முதலமைச்சர், மத்திய அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் என அனைத்துத் தரப்பிலும் நிர்பயா குற்றவாளிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க: 'எனக்கு நீதி வேண்டும்'- நீதிமன்றத்தில் மயங்கிய அக்ஷய் சிங் மனைவி!