கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டம் திலுவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனனாதா(45). இவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது வாயிலிருந்து மூடி, மற்றும் களிமண் துகள்கள் ஆகியவை வெளிவந்துள்ளன.
இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுனனாதா மீது யாரேனும் சூனியம் வைத்துள்ளார்களா என உறவினர்கள் சந்தேகமடைந்தனர். பின்னர் அவரை சதனஹள்ளி கிராமத்திலுள்ள மடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து உறவினர் ஒருவர் கூறுகையில், 'தற்போது அவர் நன்றாக உள்ளார். மடத்தில் சேர்க்கப்பட்ட பிறகு, அவர் உடல் இயல்பு நிலைக்கு மாறி வருகிறது' என்றார்.
தற்போது உள்ள நவீன உலகத்தில் கிராம மக்கள் சூனியத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 14 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 5 லட்சத்த கோட்டைவிட்ட டோமினோஸ்!