ராஜஸ்தான் ஜலவர் மாவட்டத்தில் எல்கிஜி படித்த ஆறு வயது சிறுமி நேற்று காணாமல் போனார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் சிறுமியின் உடல் ஒரு வாடகை வீட்டில் கட்டப்பட்ட சாக்கிலிருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
இதனையடுத்து உடலை கைப்பற்றி உடற்கூறாவிற்கு அனுப்பி பரிசோதித்ததில், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இது குறித்து வாடகை வீட்டில் தங்கிருந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க....கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை