ETV Bharat / bharat

பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி: துணியில் குழந்தையை மறைத்த வைத்த கொடூரம்! - rape victim gives birth on terrace in Delhi

டெல்லி: பாலியல் வன்கொடுமைக்குள்ளான 16 வயது சிறுமி, தனது குழந்தையை துணியில் மறைத்து வைத்து கடைக்கு அருகே எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Rape
Rape
author img

By

Published : Nov 5, 2020, 5:02 PM IST

வடக்கு டெல்லியில் உள்ள கடைக்கு அருகே ஒரு குழந்தை அழுகும் சத்தம் கேட்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் துணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையை மீட்டனர்.

இதற்கிடையே, கடைக்கு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோது ஒரு சிறுமி அக்குழந்தையை அங்கு எறிந்தது தெரியவந்தது. இதையடுத்து, அச்சிறுமியிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தன் வீட்டிற்கு அருகே உள்ள 60 வயது முதியவர் ஒருவர் ஒன்பது மாதங்களுக்கு முன்பு தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சிறுமி தெரிவித்தார். இதனை பெற்றோரிடம் தெரிவித்தால், ஏதேனும் விபரீதம் நடந்துவிடுமோ என எண்ணி அதனை மறைத்துள்ளார்.

இதனிடையே, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர். இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.