கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24ஆம் தேதி முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே ஊரடங்கு உத்தரவால் பல்வேறு மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு, ஏதுவாக மத்திய அரசு சார்பாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 50 நாள்களுக்குப் பின், ரயில் சேவை தொடங்கப்பட இருந்ததையடுத்து, சிறப்பு ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில் சிறப்பு ரயில்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில்,
- 'மே 22ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் டிக்கெட் வழங்கப்படும்.
- டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கரோனா வைரஸ் அறிகுறியுடன் இருந்தால், அவர்கள் ரயில்களில் பயணிக்க முடியாது. அவர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டின் முழுத்தொகையும் திரும்ப அளிக்கப்படும்.
- ஆர்ஏசி டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தபின், அதனை ரத்து செய்ய முடியாது. தட்கல் பிரிவுகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படமாட்டாது.
- ரத்து செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு, தற்போதுள்ள விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:ஒருபோதும் தொழிலாளர் நல சட்டங்களைத் திருத்த மாட்டோம் - மம்தா திட்டவட்டம்