இதுகுறித்து மத்திய உயர் கல்வித் துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், "பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிக்காட்டுதல்படி இறுதி ஆண்டு பருவத்தேர்வுகளை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கட்டாயம் நடத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதி ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படாமலிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் இறுதி ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்வின்றித் தேர்ச்சி அறிவித்த டெல்லி பல்கலைக்கழகம்!