பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இன்று நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறு முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும், அதில் பயங்கரவாதத்துக்கு எதிரான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சைபர் குற்றங்களை விசாரிக்க அதிகாரங்கள் வழங்கும் சட்டத்திருத்தம், நுகர்வோர் பாதுகாப்பு, மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் உள்ளிட்ட ஆறு மசோதாக்களுக்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.