பெங்களூரு: கர்நாடாக மாநிலம் மெக்கான் மாவட்ட மருத்துவமனையிலும், சிவமோகா மருத்துவமனையிலும் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக சிறிய நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை கண்காணிக்கும் சுகாதாரப் பணியாளர்களின் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்நூலகங்களுக்கு புத்தகங்களை புத்தக பதிப்பாளர்கள், புத்தக விற்பனை நிலைய உரிமயைளர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து சிவமோகா மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதர் பேசுகையில், கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுவரும் நோயாளிகளின் மன ஆரோக்கியத்திற்காக இந்நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏராளமான நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்ட தொற்றை எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள். அவ்வாறான நோயாளிகள், புத்தகங்களை வாசிக்கும்போது, மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: 'டீக்கடைக்குள் நூலகம்' - அருவி டீக்கடைக்குள் அறிவை வளர்க்கும் புத்தகங்கள்