ETV Bharat / bharat

பாதுகாப்பு அமைச்சக கேன்டீன்களில் சீன பொருள்களுக்கு விரைவில் தடை

author img

By

Published : Oct 24, 2020, 3:08 PM IST

டெல்லி: உள்ளூர் பொருள்களை ஊக்குவிக்கும் முயற்சியாக சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை பாதுகாப்பு அமைச்சகத்தின் கேன்டீன்களில் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு அமைச்சக கேண்டீன்களில் சீன பொருளுக்கு விரைவில் தடை

சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல பொருள்களை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கேன்டீன்களில் விற்பனை செய்யப்படுவதை நிறுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களில் சிஎஸ்டியும் ஒன்றாகும். மூன்றாயிரத்து 500க்கும் மேற்பட்ட கேன்டீன்கள் வடக்கில் சியாச்சின் பனிப்பாறை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் வரை இயங்கிவருகின்றன. சிஎஸ்டி மூலம் விற்கப்படும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு பொருள்களில், 400 பொருள்கள வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இவற்றில், கழிவறை தூரிகைகள், டயபர் பேண்ட், ரைஸ் குக்கர், சாண்ட்விச் டோஸ்டர், வேக்கம் கிளீனர்கள், மடிக்கணினி மற்றும் டெஸ்க்டாப் கணினி உள்ளிட்ட பெரும்பாலான பொருள்கள் சீன நிறுவனங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த பொருள்களை சி.எஸ்.டி கவுண்டர்கள் மூலம் விற்பனை செய்வதை தடைசெய்யப்பட்டு, அவை இந்திய தயாரிப்புகளால் மாற்றப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிநாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்வதும் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில மாதங்களாக, உயர்நிலை வெளிநாட்டு மதுபான பிராண்டுகள் யூனிட் ரன் கேன்டீன்களில் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.