ETV Bharat / bharat

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்! - புலம்பெயர்ந்த ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள்

ஹைதராபாத்: தெலங்கானாவில் சிக்கித்தவித்த ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

Migrant
Migrant
author img

By

Published : May 1, 2020, 12:26 PM IST

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிந்துவந்த தொழிலாளர்கள், கல்வி பயின்றுவந்த மாணவர்கள் எனப் பலரும் தங்களது சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். பலர் நடந்தே தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்

இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அவதிப்பட்டுவந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே சிறப்பு ரயில் இயக்க அனுமதியளித்ததை அடுத்து, ஹைதராபாத்திலிருந்து ஜார்கண்டின் ஹதியாவுக்கு ரயில் இயக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்க பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது, பின்னர் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி மக்கள் ரயிலில் பயணம்செய்தனர்.

இதையும் படிங்க: பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே தமிழ்நாடு வந்த இளைஞ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.