கேந்திரிய போலீஸ் கல்யாண் பந்தர் (Kendriya Police Kalyan Bhandar)இன் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்.எம். மீனாவை மீண்டும் அவரது பழைய துறையான மத்திய ஆயுத காவல் படைக்கு மாற்றிவிட்டு, காவல் துறை துணைத் தலைவர் ராஜிவ் ரஞ்சனை புதிய தலைமை நிர்வாக அலுவலராக உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
நிர்வாகக் காரணங்களால் ஆர்.எம். மீனாவை மீண்டும் மத்திய ஆயுத காவல் படைக்கு மாற்றி உள்ளதாகவும், அவருக்குப் பதிலாக மூன்று மாத காலத்திற்குக் காவல் துறை துணைத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் குமார், இந்தப் பதவியில் செயல்படுவார் எனவும் உள்துறை அமைச்சகம், தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கும், பொது மக்களுக்குமான கூட்டுறவு அங்காடியான கேந்திரிய பந்தரில், முன்னதாக இந்தியத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாதது; இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை பட்டியலிட்டதில் குளறுபடிகள் நிகழ்ந்தது ஆகிய காரணங்களால், மத்திய உள்துறை அமைச்சகம் மீனாவிற்கு எதிராக விரைவில் நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.
இந்நிலையில் மீனா மாற்றப்பட்டு, ராஜிவ் ரஞ்சன் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : பிகாரில் காவல்துறையினர் மீது கல் வீச்சு: 10 காவலர்கள் படுகாயம்