மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் பெங்களூரு புறப்படத் தயாராக இருந்தது. அச்சமயத்தில் ஒரு இளைஞர் விமான ஓடு பாதையில் ஓடினார். பின்னர் அவரை அழைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அந்த இளைஞர், ’எனக்கு விமானத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால்தான் விமானத்தின் முன் பக்கம், பின் பக்கம் என எல்லா இடங்களையும் தொட்டுப் பார்த்தேன்’ என்றார்.
பின்பு காவல்துறை சந்தேகமடைந்து இளைஞரின் உறவினர்களை வரவழைத்து விசாரித்தனர். அவர்கள், இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர், அதற்கான சிகிச்சை எடுத்துவருகிறார். அதற்கான மருத்துவச் சான்றிதழும் இருக்கிறது என்று கூறினர். இதையடுத்து இளைஞரின் உறவினர்கள் மருத்துவச் சான்றிதழை காண்பித்த பிறகு காவல் துறை அந்த இளைஞரை விடுவித்தது.