சிரஞ்சீவி
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சிரஞ்சீவி 2008ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் இக்கட்சியை ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைத்தார். அப்போது நம்பிக்கையின் கதிர், அடுத்த முதலமைச்சர் என்றெல்லாம் கொண்டாடப்பட்டார்.
இதையும் படிக்கலாம்: #Chiru152: அடுத்த படத்திற்கு தயாரான 'சைரா' சிரஞ்சீவிகாரு
ஒரு கட்டத்தில் அப்போதைய முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியை தூக்கிவிட்டு சிரஞ்சீவியை முதலமைச்சராக்க திட்டம் எல்லாம் போடப்பட்டதாகவும் ஆனால் இந்தத் திட்டம் ஒரு கட்டத்தில் கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் வாழ்க்கை
தொடர்ந்து ஆந்திராவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது காங்கிரசிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அவரின் சகோதரர் பவன் கல்யாணும் அரசியலுக்கு வந்துவிட்டார்.
இதையும் படிக்கலாம்: 'சைரா' சிரஞ்சீவி தமிழிசையிடம் வைத்த வேண்டுகோள்!
இந்த நிலையில் பவன் கல்யாணும் சிரஞ்சீவியும் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போகின்றனர் என்ற தகவல் அண்மைக் காலமாக வெளியாகிவருகிறது.
சந்திப்பு
சிரஞ்சீவிக்கு மாநிலத் தலைவர் பதவியும் பவன் கல்யாணுக்கு கட்சியில் முக்கிய பதவியும் கிடைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் சிரஞ்சீவி இன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்துப் பேசினார்.
பொன்னாடை
ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டிற்கே சென்ற சிரஞ்சீவி அவருக்குப் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தார். ஜெகன் மோகன் ரெட்டியும் சிரஞ்சீவிக்கு பொன்னாடை போர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் இருவரும் பரஸ்பரமாக கைகுலுக்கிக் கொண்டனர்.
இதையும் படிக்கலாம்: ஒரே அட்வைஸ், மூனு பேரும் கேட்கல! - அமிதாப் பச்சன்
இந்தச் சந்திப்பு தடேபள்ளி பகுதியில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் நடந்தது. சந்திப்பின்போது, சிரஞ்சீவியின் மனைவி உடனிருந்தார்.
பரபரப்பு
இந்தச் சந்திப்பு ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாம்: வாழ்க்கையை கொண்டாட வயது வரம்பு இல்லை: சத்யராஜ் போஸ்டரை வெளியிட்ட சிரஞ்சீவி