கேரள மாநிலம் கொல்லம் புறவழிச்சாலையில் மங்காட்டில் பங்கஜாக்ஷன் கடையொன்றை நடத்திவருகிறார். சமையல் கலைஞரான இவருடன், நான்கு காகங்கள் நட்பாகப் பழகிவருகின்றன. சுமார் 15 ஆண்டு காலமாக இவர்களது நட்பு தொடர்ந்துவருகிறது.
இந்தக் காகங்கள் ஒரு நாளைக்கு 10 முறை பங்கஜாக்ஷன் கடைக்கு வந்து விளையாடிச்செல்கின்றன. அப்படி வரும்போது அந்தக் காகங்களுக்கு ஏதாவது தானியங்களை கொடுக்கிறார். அப்போது, அந்தக் காகங்கள் எந்தத் தயக்கமும், பயமுமின்றி அந்த உணவுகளை உண்பதை நாம் பார்க்க முடியும்.
இந்தச் சமயத்தில் காகங்களுடன் பங்கஜாக்ஷன் கண்ணாம்பூச்சியும் விளையாடுகிறார். காகங்கள் உணவை எடுக்கவரும்போது விரல்களை மடக்கி தானியங்களை மறைத்துவைக்கிறார்.
காகங்களிடம் மட்டுமின்றி கடைக்கு வரும் மக்களிடமும் பங்கஜாக்ஷன் நட்பு பாராட்டிவருகிறார். அப்படி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் 23 ரூபாய் பால் பாக்கெட்டை வாங்க விரும்பாதபட்சத்தில், 250 மில்லி பாலை ரூ.12-க்கு கொடுக்கிறார். அப்படி கொடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளிலிருந்து பாத்திரத்தை மட்டும் கொண்டுவந்தால் போதுமானதாகும்.
அதுமட்டுமின்றி மக்கள் பலர் தொலைதூரம் பயணித்து பங்கஜாக்ஷனின் சுவாரஸ்யமான கதையைக் கேட்கவும், அவர் தயாரிக்கும் சிறப்பான மோரை குடிக்கவும் வருகின்றனர்.
இதையும் படிங்க...பாஜக கூட்டணிக்கு திரும்பும் முன்னாள் முதலமைச்சர்: பரபரப்பான அரசியல் சூழலில் நடக்கப்போவது என்ன?