ETV Bharat / bharat

அநாதை சடலங்களை புதைப்பதில் வெள்ளிவிழா கண்ட நாயகன் சந்திர குருவின் கதை!

புதுச்சேரி: அநாதை சடலங்களைப் புதைப்பதைத் தொழிலாகக் கொண்டவர், சந்திர குரு. வெள்ளி விழா நாயகன். இவர் 25 ஆண்டுகளில் இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்ட அநாதை உடல்களை அடக்கம் செய்துள்ளார். ஆனால் புதுச்சேரி அரசு இவருக்கான குறைந்தபட்ச கூலியைக்கூட கொடுக்காமல் தாமதித்ததால், தற்போது அது லட்சம் ரூபாயைத் தொட்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை.

அனாதை சடலங்களை புதைப்பதில் வெள்ளிவிழா கண்ட நாயகன்

author img

By

Published : Oct 28, 2020, 8:47 PM IST

Updated : Oct 30, 2020, 6:28 AM IST

எங்கு யார் உயிரிழந்தாலும் தன்னைத் தான் முதலில் கூப்பிடுவார்கள் எனப் பேசத் தொடங்குகிறார் சந்திர குரு. சாலையோரம், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் உயிரிழந்து கிடக்கும் அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்த முயலும்போது அவர்களுடனே சாமானியனின் தோற்றத்தில் சடலத்தை வெகு இயல்பாக ஒருவர் எடுத்துச் செல்வார். அவர்களில் ஒருவர்தான் புதுச்சேரி தீப்ராயபேட்டை பகுதியைச் சேர்ந்த மயான ஊழியர் சந்திர குரு.

இறுதிச்சடங்கு செய்யப்படாமல் கேட்பாரற்று தனித்துவிடப்படும் அநாதை உடல்களை 25 ஆண்டுகளாக எவ்வித சலிப்புமின்றி அடக்கம் செய்துவருகிறார் இந்த வெள்ளி விழா நாயகன். எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தார், என்னென்ன அனுபவங்கள் அவருடைய இரவை ஆக்கிரமித்துள்ளன என்பது குறித்து அவரிடம் உரையாடினோம்.

தனது உறவினர் பெண் ஒருவருக்கு உதவவே இந்தத்தொழிலில் முதல்முறையாக ஈடுபட்டார். அந்தச் சமயங்களில் சாதாரண வண்டியில் அநாதை சடலங்களை எடுத்துச் செல்வார்களாம். புதுச்சேரி நகராட்சிக்குச் சொந்தமான வண்டி என அதில் எழுதப்பட்டிருக்கும். அதுவே, அதனுடைய அடையாளம் என்கிறார் மெல்லிய புன்னகையோடு.

அந்தத் தள்ளு வண்டியில் எடுத்துச் செல்லப்படும் சடலங்களை ராயப்பேட்டை இடுகாட்டில் தானே குழி தோண்டி புதைப்பது இவருடைய வழக்கம். அந்தக் காலகட்டத்தில் ஒரு சடலடத்திற்கு 100 ரூபாய் மட்டும்தான் அவரது ஊதியம்.

இந்தச் செயல் நாளடைவில் ஒரு சடலத்திற்கு ஆம்புலன்ஸ் எடுத்துச் சென்று குழிதோண்டி புதைப்பது வரை என நீண்டுள்ளது. இதற்காக, ரூபாய் ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வாழ்க்கைப் பயணங்கள் மயானத்தில்தான் முடியும், ஆனால் இவருக்கு வாழ்க்கையே இங்குதான் உதயமானது.

யார் இந்த சந்திர குரு

மழைக்குக்கூட பள்ளிக்கூடத்திற்கு ஒதுங்காத சந்திர குரு, வறுமையின் இம்சையில்தான் தனது பால்ய நாள்களைக் கழித்துள்ளார். இதனால் சிறுவயதிலேயே மயானத்தில் பணிபுரியும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

சந்திர குருவின் பணி

குடும்பத்தாரால் கைவிடப்படும் முதியோர், சாலையோரங்களில் திரியும் மனநிலைப் பாதிப்படைந்தோர், யாசகர்கள், நோயாளிகள் இவர்களில் எவருக்கும் தங்களது வாழ்க்கையில் சுக துக்கங்களைப் பகிரக்கூட ஆளிருக்காது. பிறகு இவர்களின் இறுதிச்சடங்கு எப்படி நிகழும்? சந்திர குரு போன்ற மயான ஊழியர்களால்தான்.

இவர்களுக்கு காவல் துறையினர் உத்தரவிடுவதன்பேரில் எந்நேரத்திலும் கூப்பிட்டக் குரலுக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து அடையாளம் தெரியாத சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்கின்றனர். இதற்காக நகராட்சி சார்பில் கூலி வழங்கப்படுகிறது.

கரோனா காலத்தில்...

சமீப நாள்களில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உயிரிழந்தவரின் சடலத்தை முழுமையாக பேக்செய்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதும் இவரது பணிதான்.

2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை தனக்கு வழங்கவேண்டிய சட்டத்திற்கான பில்லில் லட்சம் ரூபாயை புதுச்சேரி அரசு நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கும் சந்திரகுரு, ஒவ்வொரு ஆண்டும் அவற்றை பத்திரப்படுத்தி புத்தகமாகப் பைண்டிங் செய்து வைத்திருக்கிறார். இதன் நடுவே கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் பேக்கிங் செய்வதற்கும் எவ்வித தொகையும் வழங்கப்படவில்லை.

இதற்காகப் பலமுறை அலுவலர்களிடம் முறையிட்ட சந்திர குரு, அதனால் எந்த உபயமும் இல்லை என்கிறார் தனது குரலில் சலிப்பு மேலிட. இதுவரை இரண்டாயிரத்து 500-க்கும் மேற்பட்ட அநாதை உடல்களை அடக்கம் செய்துள்ள சந்திரகுமாரிடம் மறக்கமுடியாத சம்பவம் குறித்து கேட்டோம்.

”சில நேரத்துல அடக்கம் எல்லா முடிஞ்சிரும். அதுக்கு அப்புறம்தான் அவங்க சொந்தக்காரங்களுக்கு அது தெரியும். புதைச்ச இடத்தைக் காட்டினா அங்க கண்ணீர் விட்டு கதறி அழுவாங்க. நான் தூரமா நின்னு பாத்துட்டு இருப்பேன். அப்படி ஒரு நாள் நிக்கிறப்ப மயானத்துக்கு வந்த ஒருத்தங்க என் கையப் பிடிச்சு நன்றி சொன்னாங்க. இந்த வேலையோட சிறப்பே அப்பதான் எனக்கு விளங்குச்சு” என உணர்ச்சிப்பொங்க பேசும் சந்திர குரு அக்காட்சியை நமக்கும் ஒருமுறை மனக்கண் முன் காட்டுகிறார்.

குறைந்தபட்ச கோரிக்கை

அநாதை உடல்களுக்கு முறையான இறுதிச்சடங்கு செய்யும் சந்திர குருவின் நிலைமையோ நிராதாரவாக விடப்பட்டுள்ளது. அவருக்கு புதுச்சேரி அரசு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது அவரது குறைந்தபட்ச கோரிக்கையாக உள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி நகராட்சி அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அரசிடம் நிதி தட்டுப்பாடு உள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார். இந்தப் பதில் சந்திர குருவிற்கு தற்போதைக்கான ஆறுதல்தான். அரசு இனியும் தாமதிக்கக் கூடாது.

இதையும் படிங்க:'தூங்கி எழுந்ததும் கரோனாவால இன்னொரு சாவு விழுந்துடக் கூடாதுனு மனசு தவிக்குது' - மயான ஊழியர் உருக்கம்

Last Updated : Oct 30, 2020, 6:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.