உத்தரப்பிரதேசத்தில் மீரட் நகரில், மோதிப்பூரம் பகுதியில் வேணு - தர்மேந்திரா தம்பதியினருக்கு பிறந்த ஆண் இரட்டைக் குழந்தைகளுக்கு குவாரன்டைன், சானிடைஸர் என்று அவர்கள் புதுவிதமாகப் பெயரிட்டுள்ளனர். இவர்களுக்கு பதின்ம வயதில் மணி என்ற மகளும் உள்ளார்.
குவாரன்டைன், சானிடைஸர் என்று இரு பெயர்களும் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட உதவுவது; மேலும் இது மனிதர்களுக்குப் பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. ஆகையால், இந்தப் பெயர்களை வைத்ததாக இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.
வேணு பிரசவத்திற்கு முன்பு, கரோனா பரிசோதனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறப்பு ரயிலில் பயணித்தபோது குடிபெயர்ந்த தொழிலாளர் உயிரிழப்பு!