ETV Bharat / bharat

மருத்துவ கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

டெல்லி: மருத்துவ கல்லூரிகளை வரும் ஒன்றாம் தேதி அல்லது அதற்கு முன்பாக திறக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
author img

By

Published : Nov 26, 2020, 1:49 PM IST

கரோனா காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த எட்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, அதனை திறக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், மருத்துவ கல்லூரிகளை வரும் ஒன்றாம் தேதி அல்லது அதற்கு முன்பாக திறக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

மாநிலம், யூனியன் பிரதேச தலைமை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதிய கடிதத்தில், "மருத்துவ கல்லூரிகளை வரும் ஒன்றாம் தேதி அல்லது அதற்கு முன்பாக திறக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கலாம். தனிநபர் இடைவெளி, கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை அனைத்து கல்லூரிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, பயிற்சி வகுப்பு குறித்த தற்காலிக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கரோனா பாதிக்கப்படாத நோயாளிகளின் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த தேசிய மருத்துவ ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவ கல்வியின் நலனை கருதி அதனை மேம்படுத்தும் விதமாக நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளை ஒரே நேரத்தில் திறக்க தேசிய மருத்துவ ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.