உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிரி கட்சிகளாக இருந்த சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து, பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 37 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்தது.
காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்த்த நிலையில் தனித்துவிடப்பட்டது. பிறகு காங்கிரஸ் ஏழு தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்தது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தேவை இல்லை எனவும், சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியே தனித்து நின்று பாஜகவை வீழ்த்தும் எனக் கூறியுள்ளார்.
80 தொகுதிகளை உடைய உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.