உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக ரேஷன் அட்டை விநியோகத்தை தொழிலாளர் தினத்தில் (மே1) தொடங்கி வைத்தார்.
ரூ.300 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தினால், மாநிலத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள். இதன் மூலம், வெளி மாநிலங்களில் வேலைபார்த்து உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பிய தொழிலாளர்களும் வெளி மாநிலங்களில் உள்ள ரேஷன் அட்டை (கார்டு) மூலம் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.
ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கும் உணவுப் பொருள்கள் கிடைக்கும். இதுகுறித்து வீடியோ மூலம் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “போதுமான அளவு உணவு தானியங்கள் கையிறுப்பு உள்ளதாகவும் யாரும் பசியுடன் இருக்கும் நிலைக்கு தள்ளப்படமாட்டார்கள்” என்றும் தெரிவித்தார்.
-
'मई दिवस' पर... pic.twitter.com/okoEO6nsQG
— Yogi Adityanath (@myogiadityanath) May 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'मई दिवस' पर... pic.twitter.com/okoEO6nsQG
— Yogi Adityanath (@myogiadityanath) May 1, 2020'मई दिवस' पर... pic.twitter.com/okoEO6nsQG
— Yogi Adityanath (@myogiadityanath) May 1, 2020
மேலும் “ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க மாநில அரசு ஏற்கனவே ரூ.18 கோடி செலவிட்டுள்ளது. பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும் அடுத்த கட்டமாக மீட்டு கொண்டுவரப்படுவார்கள்.
'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு' திட்டம் மூலம் தங்கள் சொந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொழிலாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடவடிக்கை - மாயாவதி