சில தினங்களுக்கு முன் இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜே.என்.யு. மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை பல்வேறு தரப்பினர் கண்டித்துவருகின்றனர்.
இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "வன்முறையைத் தூண்டும் வகையில் தாக்குதல் குறித்த தவறான தகவல்கள் வேண்டுமென்றே நாடு முழுவதும் பரப்பப்பட்டுவருகிறது. இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முகமூடி அணிந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்.
ஜே.என்.யு. தாக்குதல் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்த அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: பிரபல ஓவியக் கலைஞர் ஈஷா யோகா மையத்தில் மரணம்!