ETV Bharat / bharat

இந்த மாதமும் கார் உற்பத்தி குறைவு... தொய்வில் மாருதி நிறுவனம்! - latest economic news in india

டெல்லி: மாருதி கார் நிறுவனம் தொடர்ந்து 8ஆவது மாதமாக தனது வாகன உற்பத்தியை குறைத்துள்ளது.

maruthi-suzuki
author img

By

Published : Oct 8, 2019, 6:46 PM IST

கடந்த ஏழு மாதங்களாக தனது கார் உற்பத்தியை தொடர்ந்து குறைத்து வந்த மாருதி கார் நிறுவனம், இம்மாதமும் தனது உற்பத்தியை குறைத்துள்ளது. அதன்படி, 2018 செப்டம்பர் வரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 659 அளவு கார் உற்பத்தி செய்து வந்த மாருதி கார்களின் அளவு, இந்தாண்டு செப்டம்பரில் 27 ஆயிரத்து 395 கார்கள் குறைந்து 1 லட்சத்து 30 ஆயிரத்து 264 அளவு உற்பத்தி செய்யப்பட்டது.

குறிப்பாக வேகனார், ஆல்டோ, செலரியோ, இக்னிஸ், பேலினோ, சுவிப்ட் டிசையர் உள்ளிட்ட சிறிய ரக கார்களின் உற்பத்தி, 98,337ஆக குறைந்துள்ளது.

மேலும், பெரிய ரக கார்களான எஸ்-கிராஸ், ப்ரீசா உள்ளிட்ட கார்களின் உற்பத்தி 17.05% குறைந்துள்ளது. கார்களின் விற்பனை சரிந்துள்ளதால் உற்பத்தியை குறைத்து வருவதாக மாருதி நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளிநாடுகள் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெறுவதே ஆட்டோமொபைல் துறை சரிவிற்கு காரணம் - மாருதி சுசுகி தலைவர் பார்கவ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.