ETV Bharat / bharat

காதலித்து மணம் முடித்த மகள்: கோபத்தில் குடும்பத்தினர் செய்த கொடூரம்! - கோபத்தில் குடும்பத்தினர் செய்த கொடூரம்

ராம்பூர்: காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை பெண் வீட்டார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோபத்தில் குடும்பத்தினர் செய்த கொடூரம்
கோபத்தில் குடும்பத்தினர் செய்த கொடூரம்
author img

By

Published : Sep 12, 2020, 7:20 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்தற்காக அவரது உறவினர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெண் தனது காதல் விவகாரத்தை வீட்டில் கூறும் போது, குடும்பத்தில் யாருக்கும் உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. தான் காதலிப்பதை கூறியதிலிருந்து குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்தியதாக அந்த பெண் கூறுகிறார். இதையடுத்து, தனது காதலனிடம் நடந்தவற்றைக் கூறிய பின், வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் தந்தையும், சகோதரனும் சைத்நகரில் வைத்து இளம் தம்பதியினரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிகிச்சைக்காக வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கர்ப்பிணி மகள் முகத்தில் அமிலம் வீசிய தந்தை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.