ETV Bharat / bharat

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு - இளைஞர் கைது

லக்னோ: 17 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் வன்புணர்வு செய்து அதன் காணொலியை வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்த இளைஞரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

WhatsApp  rape  teenager  blackmail  coronavirus  lockdown  பாலியல் வன்புணர்வு  வாட்ஸ் அப்  மிரட்டல்  நொய்டாவில் 17 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு  கரோனா ஊரடங்கு
rape
author img

By

Published : May 28, 2020, 12:32 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, அண்டை வீட்டில் 26 வயது இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் பணிக்குச் சென்றபோது, அந்த இளைஞர் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

அதை அவரது நண்பர் செல்போனில் காணொலியாக பதிவு செய்துள்ளார். அந்தக் காணொலியை காட்டி சிறுமியை மிரட்டி கடந்த ஒரு வருடமாக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதனிடையே, தற்போது கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிறுமி தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து, அந்தக் கணொலியை வாட்ஸ் அப் குழுக்களில் அந்த இளைஞர் பகிர்ந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சிறுமி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், பிரிவு 376(பாலியல் வன்புணர்வு), பிரிவு 328 (விஷத்தை பயன்படுத்தி காயத்தை ஏற்படுத்துவது), பிரிவு 120 பி (குற்றச்சதி), பிரிவு 506 (மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிமுக பிரமுகர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.