ETV Bharat / bharat

24 வயது இளைஞர் கொலை! - Man on motorcycle trip killed by gang of five in Thane

மும்பை: உல்ஹாஸ்நகரில் இன்று (மே 25) அதிகாலை 24 வயது இளைஞர், ஐந்து பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார்.

Murder in Thane
Murder in Thane
author img

By

Published : May 25, 2020, 6:38 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தின், தானே மாவட்டத்தில் உல்ஹாஸ்நகரில் இன்று (மே25) அதிகாலை 24 வயது இளைஞர் ஒருவரை, ஐந்து பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்றதாகத் தெரிகிறது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரைத் தேடி வருவதாக, காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது; 'இறந்து போனது அப்பகுதியைச் சேர்ந்த ஷாதாப் ஷேக் என்று அடையாளம் காணப்பட்டது. கொலை செய்ததாக சந்தேகப்படும் ஐந்து பேர் மூன்று மோட்டார் இருசக்கரவாகனங்களில் அருகிலுள்ள ஹாஜி மலாங்கைப் பார்வையிடப் புறப்பட்டிருக்கின்றனர். அதிகாலை 1:30 மணியளவில் இந்த ஐந்து பேரை நேருக்கு நேர் சந்தித்ததாக ஒரு அலுவலர் தெரிவித்துள்ளார்.

மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட இந்தக் குழு முதலில் ஷாதாப் ஷேக்கை கத்தியால் தாக்கியுள்ளனர். இதனால் ஷேக் இறந்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர்கள் தப்பித்து விட்டனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' எனக் கூறினார்.

இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.