ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்ரம் சிங் (30). இவருக்கு 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில், நேற்று முன்தினம் (டிச.06) இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கணவர், கத்தியால் மனைவி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றபோது, விக்ரம் சிங் அவரது மனைவி அருகே அமர்ந்து ஹாயாக செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விக்ரம் சிங் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.