ETV Bharat / bharat

திருமணம் தாண்டிய உறவால் குழந்தையைத் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட நபர் - தேடப்பட்டு வரும் மனைவி! - சித்தூர்

ஆந்திரா : மனைவியின் திருமணம் தாண்டிய உறவால், சித்தூரைச் சேர்ந்த நபர் லாட்ஜ் ஒன்றில் தனது மகளை தூக்கிலிட்டுக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரது மனைவியைத் தேடி வருகின்றனர்.

தற்கொலை
தற்கொலை
author img

By

Published : Sep 5, 2020, 8:39 PM IST

ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூரில் குரியர் டெலிவரி வேலை செய்து வந்தவர் கணேஷ். இவர் நேற்று முன் தினம் (செப்.03) லாட்ஜ் ஒன்றில் தனது ஐந்து வயது மகளைத் தூக்கிலிட்டுக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள சித்தூரைச் சேர்ந்த உதவிக் காவல் ஆய்வாளர் மல்லிகார்ஜூன், "சித்தூரில் வசிக்கும் கணேஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு திவ்யாவைக் காதலித்து மணந்தார். இத்தம்பதியரின் நான்கரை வயது மகள்தான் உயிரிழந்த குழந்தை கார்த்திகா. இவர்களது திருமணம் காதல் திருமணமாக இருந்தபோதும், திவ்யா, சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக கணேஷ் - திவ்யா இடையே பல மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

இதில், திவ்யாவின் தாயும் சகோதரியும் கணேஷுக்கே ஆதரவாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (செப்.03) மாலை அவர்களுக்குள் சண்டை முற்றியதைத் தொடர்ந்து, தனது மகளுடன் கணேஷ் வீட்டை விட்டு வெளியேறி தனியார் லாட்ஜில், அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி உள்ளார். தொடர்ந்து தான் தற்கொலை செய்துகொள்ளவிருப்பது குறித்து தமிழில் பேசி காணொலி ஒன்றைப் பதிவிட்ட அவர், தனது மகளை முதலில் தூக்கிலிட்டுக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றார்.

முன்னதாக நேற்று (செப்.04) காலை நான்கு மணியளவில் இந்தத் தற்கொலை விவகாரம் குறித்து அறிந்து அங்கு சென்ற காவல் துறையினர், இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இருவரது உடல்களும் அவர்களது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கணேஷுக்கும் அவரது மனைவி திவ்யாவிற்கும் ஏற்கனவே விவாகாரத்தாகியுள்ள நிலையில், தன் மனைவி பணத்திற்காக திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகவும், மனைவியுடன் உறவில் இருந்த நபர் தங்களது குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் இந்தக் காணொலிப் பதிவில் கணேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, நேற்று முதல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 302, 306, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தலைமறைவாக உள்ள திவ்யாவைத் தேடியும் வருகின்றனர்.

இதையும் படிங்க : மனைவியின் திருமணம் தாண்டிய உறவு - குழந்தையோடு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட கணவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.