ETV Bharat / bharat

கிரிக்கெட் சூதாட்டத்திற்கு நகை தராததால் தாய், தங்கையை கொன்ற இளைஞர்! - cricket betting issue at telangana

கிரிக்கெட் சூதாட்டத்திற்கு நகை தர மறுத்த தாய், தங்கையை, உணவில் விஷ மாத்திரையை கலந்து இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட்
கிரிக்கெட்
author img

By

Published : Nov 30, 2020, 1:05 PM IST

ஹைதராபாத்: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் இளைஞர் ஒருவர், நகைக்காக தனது சொந்த தாயைம், சகோதரியையும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மெட்சல் நகரை சேர்ந்த பிரபாகரன் ரெட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். தற்போது, அவரின் மனைவி சுனிதா(42), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ​​சாய்நாத் ரெட்டி என்ற மகனும், அனுஷா என்ற மகளும் உள்ளனர். இதில், சாய்நாத் எம்.டெக் படித்தபடியே பகுதி நேர வேலை பணியாற்றுகிறார். அனுஷா, பார்மசி பயின்று வருகிறார்.

சாய்நாத்துக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக, வங்கியிலிருந்த தந்தையின் காப்பீடு பணமான ரூபாய் 20 லட்சத்தை, தாயாருக்கு தெரியாமல் எடுத்து அதனை கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இருப்பினும் ஆசை தீராத சாய்நாத், வீட்டிலிருந்த நகையை விற்று பணத்தை பெற முயற்சி செய்துள்ளார். இதையறிந்த சுனிதாவும் அனுஷாவும், சாய்நாத்தை கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சாய்நாத், இருவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இளைஞர்
விஷ மாத்திரையை கலந்து தாய், தங்கையை கொன்ற இளைஞர்

இதனையடுத்து கடந்த நவம்பர் 23ஆம் தேதி, வீட்டிலிருந்த உணவில் விஷ மாத்திரயை கலந்துவிட்டு, சாய்நாத் வேலைக்கு புறப்பட்டுள்ளார். உணவை சுனிதாவும், அனுஷாவும் சாப்பிட்டுள்ளனர். உணவு சரியில்லாததை உணர்ந்த சுனிதா, உடனடியாக மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உணவு சரியில்லை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து தான் விஷம் வைத்தது இருவருக்கும் தெரிந்துவிட்டதோ என்ற பதற்றத்தில் வீட்டுக்கு சென்ற அவர் தாயும், சகோதரியும் மயக்க நிலைக்கு செல்லும்வரை காத்திருந்தார். அதன் பிறகு, தன் மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால், இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறுதிச்சடங்கில் சாய்நாத் நடத்தையில் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரிடம் விசாரித்துள்ளனர். இறுதியாக, தனது குற்றச்செயலை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் சாய்நாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.