ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நுஸ்விட் பகுதியிலுள்ள பேருந்துநிலையத்தில், 10 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையின் வருகைக்காக தனியாகக் காத்திருந்தார்.
அந்தச் சிறுமியை அவ்வழியே மிதிவண்டியில் சென்ற 35 வயது மதிக்கதக்க நபர், தந்தையைத் தேட உதவிபுரிவதாகக் கூறி அழைத்துச் சென்றார். அவரை நம்பி சென்ற சிறுமியை, யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, பின் புதருக்குள் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். வலியால் துடித்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியே சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த வழக்கில் முக்கிய தடயமான பிரியாணி பொட்டலம் ஒன்று சிக்கியுள்ளது. அதனைக் கைப்பற்றிய காவலர்கள், சம்மந்தப்பட்ட பிரியாணி கடைக்குச் சென்று அங்குள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்குட்படுத்தினர். வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த டிஎஸ்பி குற்றவாளியை நெருங்கிவிட்டதாகவும், அவர் அருகிலுள்ள பிரியாணி உணவகத்துக்குச் சென்று பிரியாணி வாங்கியுள்ளதால் விரைவில் அவரைக் கைது செய்வோம் என்றார்.
இதையும் படிங்க : ’மரண பயத்த காட்டிட்டாங்க பரமா...!’ - லாரிகள் விபத்தில் நூலிழையில் தப்பிய நபர்