உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்துவரும் ஷிகர் ஹிந்துஸ்தானி என்பவர் ரூபாய் நோட்டை தவறாக வடிவமைத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அதில், ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தி படத்தை எடுத்துவிட்டு, ராகுல் படத்தை வைத்தும், அசோக சக்கரம் இருக்கும் இடத்தில், காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்தை வைத்தும், இந்திய ரூபாய் நோட்டில் இல்லாத 420 ரூபாயையும் வைத்து பதிவிட்டுள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்திலிருந்து புகார் கொடுத்ததையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.