கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்தவர் பிரபாகர் புத்ரன்(63). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உடுப்பியிலுள்ள தனிமைப்படுத்தப்படும் மையத்தில் ஜூன் ஐந்தாம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சத்தில், நேற்று (ஜூலை 7) அவர் தனிமைப்படுத்தும் மையத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையில், நேற்று (ஜூலை 7) மாலை வெளியான இவரது பரிசோதனை முடிவில் இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து உடுப்பி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைப்போல, உடுப்பி மாவட்டம் குண்டிமி கிராமத்தில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி கார்த்திகா தற்கொலை செய்து கொண்டார். தனது தாயார் பணிபுரிந்து வந்த வீட்டின் உரிமையாளர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதையடுத்து, தனது வீட்டில் உள்ள அனைவரையும் மாநகராட்சி நிர்வாகம் வீட்டில் சுய தனிமைப்படுத்துதலில் இருக்குமாறு நிர்பந்தித்ததால் விரக்தியடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினைத் தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன.
உதவிக்கு அழையுங்கள்:அரசு உதவி மையம் எண் - 104
சினேகா தன்னார்வத் தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060