டெல்லியின் சிவாஜி விஹார் ஜனதா காலனியில் வசித்து வந்தவர் சத்யேந்தர் (27). விக்கி என்பவருடன் சத்யேந்தர் அவரது நண்பர்கள் நித்தின், மனிஷ் ஆகியோர் நேற்று (ஜனவரி 2) நள்ளிரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், விக்கியும் அவரது நண்பர்களும் சேர்ந்து சச்யேந்தரை கடுமையாக தாக்கினர்.
இதனிடையே டெல்லியின் ரகுவீர் நகரில் இளைஞர் ஒருவர், தாக்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, விக்கியும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இந்நிலையில், குரு கோபிந்த் மருத்துவமனைக்கு சத்யேந்தரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் சத்யேந்தர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.