முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான மு. கருணாநிதியின் 96ஆவது பிறந்தாநாளை அவரது கட்சித் தொண்டர்கள் இன்று (ஜூன் 3) கொண்டாடி வருகின்றனர். அவரது மறைவுக்குப் பிறகான முதல் பிறந்தநாள் என்பதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞரின் பிறந்தநாளை நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட சிறந்த அரசியல் தலைவரான கலைஞர் கருணாநிதி ராஜதந்திரியாக இருந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.